#MeToo பரப்புரை பெண்களுக்கு சாதகமான ஒன்று, ஆனால் பெண்கள் அதை தவறாக பயன்படுத்திவிடக் கூடாது என ரஜினி அறிவுறுத்தல்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதன்முறையாக மாமா ரஜினியின் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்.


இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளனதாக நேற்று நடிகர் ரஜினிகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து தமிழகம் திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 


அப்போது அவர் கூறியதாவது, டிசம்பர் 12 ஆம் தேதி கட்சி தொடங்கும் திட்டம் எதுவுமில்லை என்றும், ஆனால் கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத வேலைகள் நடந்து முடிந்துவிட்டதாகவும், நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பின், நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என ரஜினிகாந்த் குறிப்பிட்டார். மேலும், அவர் சபரிமலை தீர்ப்பு குறித்த விவகாரத்தை பற்றிய கேள்விக்கு, பெண்களுக்கு எல்லாவற்றிலும் சம உரிமை இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால், ஒவ்வொரு கோவிலுக்கு ஒரு சம்பிரதாயம் ஐதீகம் இருக்கும். அதில் யாரும் தலையீட கூடாது என்பதே என் கருத்து என்று கூறினார்.


தொடர்ந்து அவர் செய்தயாளர்களிடம் பேசுகையில், நாடு முழுவதும் எழுந்துள்ள மீடூ விவகாரம் குறித்த கேள்விக்கு, மீடூ பெண்களுக்கு சாதகமான ஒன்று. ஆனால் அதை அவர்கள் தவறாக பயன்படுத்த கூடாது என்றும் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். வைரமுத்து தன் மீது குற்றச்சாட்டை நிராகரித்துவிட்டார். அது போன்று ஒரு சம்பவமே நடக்கவில்லை. அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் வழக்கை சந்திப்பதாகவும் வைரமுத்து கூறியுள்ளதை எடுத்துக் காட்டி ரஜினி இதனை தெரிவித்தார்.