தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த அரசு ஆசிரியர்களில் 95% பேர் இன்று பணிக்கு திரும்பியதாக பள்ளிகல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது, ஆனால் இந்த தகவல் பொய்யானது என JactoGeo தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வசிக்கும் அரசு ஆசிரியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்பவேண்டும் என்று சென்னை உயர்நீநிமன்றம் அறிவுறுத்தி வருகிறது. பணிக்கு திரும்பாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து வருகிறது. மும்முனையில் நடக்கும் விவகாரங்கள் குறித்து அறியாமல் மாணவர்கள் குழம்பி தவித்து வருகின்றனர்.


இதற்கிடையில் அரசின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் சிலர்  பணிக்குத் திரும்பியதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது. அந்த வகையில் இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளது.


தமிழக அரசின் பள்ளிகல்விதுறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் என 95% பேர் இன்று பணிக்கு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆனால் இந்த தகவல்கள் ஏற்புடையாது அல்ல என JACTO GEO ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அரசு ஆசிரியார்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு தான் வருகின்றனர், நேற்று சிலர் பணிக்கு திரும்பியது உண்மை தான் ஆனால் அவர்களும் விரைவில் போராட்டத்திற்கு திரும்புவர்.


எங்களது போராட்டம் நியாயமானது, கோரிக்கைகளை அவமதிக்கும் பட்சத்தில் போராட்டம் தீவிரமடையும். ஓய்வூதியத்திற்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகை குறித்த தகவலை தமிழக அரசு வெளிப்படையாக தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.