தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகித்தால் 1 லட்சம் வரை அபராதம்....
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் வேலுமணி பேரவையில் தாக்கல் செய்தார்!
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் வேலுமணி பேரவையில் தாக்கல் செய்தார்!
சென்னை : தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் ஜனவரி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முதல்முறை என்பதால் தடையை மீறியவர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. மறுமுறை விதிகளை மீறுவோருக்கான தண்டனை மற்றும் அபராதம் குறித்த எந்த அறிவிப்பும் தமிழக அரசின் ஆணையில் இடம்பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில் பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை விவரங்கள் அடங்கிய மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிளாஸ்டிக் தடையை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கலானது. தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஜனவரி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.