கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது காட்டு யானைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும் சுற்றித் திரிகின்றன.தொழிலாளர்கள் பணிசெய்யும் தேயிலைத் தோட்டம் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே யானைகள் உலா வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யானைகள் நடமாட்டம் (Herd of Elephants) வாடிக்கையாகிவிட்ட நிலையில், சில சமயங்களில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.


வனப் பகுதிகளை (Forest Area) ஒட்டியிருக்கும் இடங்களில் யானைகள் நடமாட்டம் இயல்பானதுதான் என்றாலும், இன்று வால்பாறை அருகே உள்ள தோணிமுடி மற்றும் முத்துமுடி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளன.


இந்த காட்டு யானைகள் கூட்டம் நேற்று இரவு முதலே ஒன்றுகூடி முகாமிட்டுள்ளதால் தகவல் அறிந்த ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் கணேசன் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.


ALSO READ | இது தமிழ்நாடு பாம்புகளின் உல்லாச மழை நடனம்!


அவரது உத்தரவிற்கிணங்க மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் என்.சி.எப்.பணியாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


காட்டுயானைகளை அண்டை மாநிலமான கேரள மாநிலத்திற்குட்பட்ட வால்பாறை வனப்பகுதிக்கு விரட்டும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.


பல்வேறு பகுதிகளில் சேதங்களை ஏற்ப்படுத்தியுள்ள காட்டு யானைகள், தற்போது பெருமளவில் ஒன்றாக சேர்ந்து இருப்பதால்  அப்பகுதி பொது மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். 


READ ALSO | அம்மா உணவக பெயரை இருட்டடிக்கும் முயற்சி - அதிமுக கண்டனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR