அம்மா உணவக பெயரை இருட்டடிக்கும் முயற்சி - அதிமுக கண்டனம்

அம்மா உணவகங்களை போலவே, இன்னும் அதிகமாக 500 கலைஞர் உணவகங்கள் செயல்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்து இருந்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2021, 02:38 PM IST
அம்மா உணவக பெயரை இருட்டடிக்கும் முயற்சி - அதிமுக கண்டனம் title=

அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது தான் 'அம்மா உணவகம்'.  இந்த திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு 2013-ம் ஆண்டில் மார்ச் மாதம் 2-ம் தேதியன்று இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஆரம்பத்தில் குறிப்பிட்ட இடங்களில் தொடங்கப்பட்ட இந்த உணவகங்கள், பின்னாளில் பரவலாக அநேக இடங்களில் தொடங்கப்பட்டது.

ALSO READ குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் காணொலி வெளியீடு

இந்த உணவகங்களில் விதவிதமான உணவுகள் மலிவு விலையில் வழங்கப்பட்டது.  இதன் மூலம் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்ததோடு, ஏழை எளிய மக்களுக்கும் மலிவு விலையில் உணவு கிடைத்தது.  இந்நிலையில் ஆட்சி மாறியதை தொடர்ந்து,  அம்மா உணவகங்கள் மூடப்படக்கூடும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.  ஆனால் அதுபோல் நடக்காது, தொடர்ந்து அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும், அதற்கான பொருட்களும் எந்த தடையுமின்றி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

ammaunavagam

இந்நிலையில் அம்மா உணவகங்களை போலவே, இன்னும் அதிகமாக 500 கலைஞர் உணவகங்கள் செயல்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்து இருந்தார்.  அதனையடுத்து மதுரையில் அம்மா உணவகம் ஒன்றின்  படத்தின் அருகே கலைஞரின் படம் வைக்கப்பட்டதற்கு அதிமுக தரப்பினர்  கண்டனம் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து, திமுக அரசானது , தமிழகத்தில் 500 சமுதாய உணவகங்களை, கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்க உள்ளது, "அம்மா உணவகம்" என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட நோக்கம் கடும் கண்டனத்திற்குரியது" என்று அதிமுக தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ALSO READ நயினார் நாகேந்திரன் எதிர்க்கட்சி தலைவரா? நட்டா திறந்த கல்வெட்டில் எழுந்த சர்ச்சை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News