ஆசிரியர்களுக்கு ’அந்தரங்க’ படங்களை அனுப்பிய தாயின் கள்ளக்காதலன் கைது..!
சென்னையில் கள்ளக்காதலியின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, அந்தரங்க படங்களை ஆசிரியர்களுக்கு அனுப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை புழல் பகுதியில் இருக்கும் காவாங்கரை மகாவீர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயா. அவரது கணவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான விஜயாவின் கணவர், சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவர் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.
ALSO READ | போதையில் ரகளை செய்த மகன்; தீவைத்து எரித்த பெற்றோர்- வெளியான சிசிடிவி காட்சி
இந்நிலையில், வீட்டிற்கு வாஷிங்மெஷின் சரிசெய்ய வந்த மெக்கானிக் சுபான்பாஷாவுடன் விஜயாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சுபான்பாஷா, நாளடைவில் விஜயாவுடன் நெருங்கி பழகத் தொடங்கியுள்ளார். பின்னர், விஜயாவின் வீட்டிலேயே தங்கிக்கொள்ளத் தொடங்கியுள்ளார். அப்போது, விஜயாவின் மகள் மீதும் சுபான்பாஷாவுக்கு பார்வை விழுந்துள்ளது.
ALSO READ | போதையில் மகளுக்கு பாலியல் தொல்லை - கணவனை கொன்ற மனைவி
அவரையும் பாலியல் சீண்டலுக்குட்படுத்திய சுபான்பாஷா, நெருக்கமாக இருக்கும்போது புகைப்படங்களையும் எடுத்து வைத்திருந்துள்ளார். கொரோனா காரணமாக வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் வகுப்பில் சிறுமி பங்கேற்று வந்த நிலையில், அவரின் பள்ளி வாட்ஸ் அப் குரூப்பில் எடுத்து வைத்திருந்த அந்தரங்க புகைப்படங்களை சுபான்பாஷா பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள், காவல்துறைக்கும், சைல்டு லைனுக்கும் தகவல் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சுபான்பாஷாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR