திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பெரியமலையூர் வலசை கிராமம்.... இங்குள்ள மலைப்பகுதியில் தீயில் கருகியை நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்திருக்கிறார்கள். அதிர்ச்சியடைந்தவர்கள் அருகே சென்று பார்த்து போது அங்கு மேலும் ஒரு குழந்தையின் பிரேதமும் தீயில் கருகி இறந்து கிடந்தது. குலை நடுங்கி போனவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஊர்காரர்களை அங்கு வரவழைத்திருக்கிறார்கள். கிராமமே அரண்டு போனது. இறந்து கிடந்தது அதே கிராமத்தை சேர்ந்த தாய், மற்றும் அவருடைய பெண் குழந்தை. உடனே நத்தம் போலீசார் தகவல் கொடுக்கப்பட்டது. உடல் கிடந்த இடத்தை போலீசார் தங்களது பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வந்தனர். கைரேகை நிபுணர்களும் தடயவியல் வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஏதேனும் தடையங்கள் கிடைக்கின்றதா என்று தேடி பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிரேதம் முற்றிலும் தீயில் கருகிய நிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்வதென முடிவு செய்தனர். பச்சிளம் குழந்தை முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டதென போலீசார் தெரிவித்தனர். அதுவரை தற்கொலையாக இருக்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தவர்கள் புருவம் உயர்ந்து போனார்கள். ஆம், கொலை. இறந்துபோன பெண்ணின் உடலில் வெட்டுகாயங்கள் இருந்தது. கத்தியால் குத்தி உடலை தீ வைத்து கொளுத்தியது தெரியவந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொலை செய்தது யார் ? எதற்காக இரு உயிர்கள் இங்கு காவு வாங்கப்பட்டது ? போன்ற கேள்விகளுக்கு போலீசார் விடை தேட தொடங்கினர். இதற்கிடையே ஊர்க்கார்களின் பார்வை இறந்தப்போன பெண்ணின் கணவர் பக்கமே திரும்பியது. அவரை பிடித்து விசாரிக்காவே சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.



இதே பெரியமலையூர் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவிதான் 22 வயதான அஞ்சலை(கொல்லப்பட்டவர்). இருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. அமைதியாக சென்ற இவர்களின் வாழ்க்கையில் பேரிடி விழுந்தது. சிவக்குமாரின் அண்ணன் கருப்பையா ரூபத்தில் அதில் உருவெடுத்து வந்தது. தம்பியின் மனைவி என்றுகூட பாராமல் அஞ்சலை மீது ஆசை வளர்த்திருக்கிறார், சிவக்குமார். அதில், தவறான கண்ணோட்டத்தில் அஞ்சலைக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கணவரின் அண்ணன் என்பதால் சிவக்குமாரின் வக்கிர புத்தியை அஞ்சலையால் அதுவரை புரிந்துகொள்ள முடியாவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டருகே உள்ள மலைப்பகுதிகளில் அஞ்சலை ஆடு மேய்க்கச் சென்றிருக்கிறார். அப்போது அவரை பிந்தொடந்து சென்ற சிவக்குமார் அஞ்சலையை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அஞ்சலை சிவக்குமாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சிவக்குமார் விபரீத முடிவை கையில் எடுத்திருக்கிறார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஞ்சலையை சரமாரியாக குத்தியிருக்கிறார். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தவரை குத்துயிரும் குலையுரமாய் போராடியிருக்கிறார். அப்போது கொலைவெறியில் பித்துபிடித்து கிடந்த சிவக்குமார், தம்பியின் மனைவிக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளார்.


மேலும் படிக்க | கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண் பரிதாப சாவு..!


இப்படி ஒரு கொடூரம் அரங்கேறும் போது அஞ்சலையின் கையில் அவரது இரண்டு வயது பெண் குழந்தையும் இருந்தது. ஆம், குழந்தையைக்கும் அந்த கொடூரனால் தீ வைக்கப்பட்டது. தாயும் குழந்தையும் சேர்ந்து தீயில் கருதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 


 



பின்னர் காவல்துறையின் தீவிர விசாரணையில் கொலை செய்தது கருப்பையா தான் என உறுதி செய்யப்பட்டது. கருப்பையாவை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசைக்கு இணங்க மறுத்த தம்பி மனைவியை அவரது குழந்தையோடு சேர்த்து தீ வைத்து எறித்த கொன்ற சம்பவம் திண்டுகலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை - காதல் விவகாரமா ?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR