தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்தவரும், திமுகவின் தலைவருமாக இருந்தவர் மு.கருணாநிதி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து திமுகவின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழலில் கருணாநியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுசரிக்கப்படவிருக்கிறது. இதனையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணி நடக்குமென்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக் அலுவலகமான அண்ணா அறிவாலயம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அண்ணாவின் மறைவுக்கு பிறகு, தி.மு.க. தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது நான்காவது ஆண்டு நினைவுநாளையொட்டி தமிழக முதலமைச்சரும், திமுக கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்ட கட்சியின் முன்னணியினர் கலந்து கொள்ளும் "அமைதிப் பேரணி" வருகிற 7ஆம் தேதி தேதி நடைபெற உள்ளது. 


மேலும் படிக்க | நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான இறுதி எச்சரிக்கை- சென்னை ஐகோர்ட்


அன்று காலை 8.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரர் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து புறப்பட்டு காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர், கட்சி நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கருணாநிதியின் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பிரகதாம்பாள் கோயில் தேர் விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: சேகர் பாபு


மேலும் படிக்க | அதிமுகவில் அடுத்த பஞ்சாயத்து... சீரியஸா எடுத்துக்காதீங்க என்று ஜெயக்குமார் விளக்கம்


மேலும் படிக்க | ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு - நிர்வாகத்தின் பதிலுக்கு குவியும் கண்டனம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ