ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு - நிர்வாகத்தின் பதிலுக்கு குவியும் கண்டனம்

Sexual harrasment in IIT : சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளித்தும், ஐஐடி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Aug 1, 2022, 11:28 AM IST
  • சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு
  • மாணவர்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என பதில்
  • ஐஐடி நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்துள்ளதாக குற்றச்சாட்டு
ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு - நிர்வாகத்தின் பதிலுக்கு குவியும் கண்டனம் title=

சென்னை ஐ.ஐ.டி.யில், கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மாணவி ஒருவர், கடந்த 24-ம் தேதி இரவு தான் தங்கியிருக்கும் விடுதிக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவருக்குப் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். உதவி கேட்டு கூச்சலிட்டும் யாரும் வராததால்,  அந்த மாணவியே மர்ம நபருடன் சண்டையிட்டு தன்னைக் காப்பாற்றி கொண்டதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த மாணவி  புகார் ஏதும் அளிக்கவில்லை. இந்நிலையில் மாணவியின் நண்பர் அளித்த புகார் அடிப்படையில், ஐ.ஐ.டியில் வேலை பார்க்கும் வட மாநில நபர்களில் யாராவது இருக்கலாம் என, 300 பேரின் புகைப்படங்களை காண்பித்து கல்லூரி நிர்வாகம் விசாரித்தது. சம்பவம் நடந்தது இரவு நேரம் என்பதால் அடையாளம் காண்பிக்க முடியவில்லை. அன்று ஐஐடியில் இருந்த 35 கட்டுமான ஊழியர்களையும்  அழைத்து கல்லூரி நிர்வாகம் அடையாள அணிவகுப்பு நடத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஐ.ஐ.டி., நிர்வாகத்தினர்  அளித்துள்ள பதிலில், வளாகத்தில் ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ஒரு பாதுகாவலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், உதவி தேவைப்படும் நேரத்தில், ஊழியருடன் பேருந்தை அழைக்கும் வசதியும் உள்ளது.இரவு நேரங்களில், ஐ.ஐ.டி., வளாகத்தில் தனியாக பயணிக்கும் மாணவியர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். 

மேலும் படிக்க | அரசு பேருந்தில் புதிய கட்டணங்கள் பற்றி பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

துரிதமான உதவிக்கு பாதுகாப்பு பிரிவை உடனே அணுகுங்கள். மொபைல் போன் செயலி வாயிலாக பாதுகாப்பு அளிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். சுமார் 600 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் பாதுகாப்பு அளிப்பது சவாலாக இருப்பதாகவும்,பட்டி சிஸ்டம் buddy sytem என்ற முறையில் நண்பர்களை உடன் அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஐஐடி நிர்வாகத்தின் இந்த பதிலுக்கு பலதரப்புகளில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஐஐடி நிர்வாகம், இதுபோன்று பாலியல் தொந்தரவு தொடர்பான புகாருக்கு மாணவர்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பதில் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை காவல்துறை உதவி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் ஐஐடி வளாகத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு விவகாரம் தொடர்பாகவும், அதில் ஐஐடி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க | கோவையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறிவைத்து சாக்லேட் வடிவில் கஞ்சா

Trending News