குளித்தலை அருகே பயங்கர சாலை விபத்து: 7 பேர் பலி
குளித்தலை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகினர்.
குளித்தலை அருகே உள்ள கே.பேட்டை பகுதியில் மணல் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
காரில் பயணம் செய்த 11 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரில் பயணம் செய்தவர்கள் கேரள மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் எனவும் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துவிட்டு திரும்பிய போது இந்த கோர விபத்து நடைபெற்றிருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.