ராமபிரானின் தீவிர பக்தரான அனுமன் வலிமை, துணிச்சல், வீரம், புகழ் ,ஆரோக்கியம் என அனைத்தையும் தன்னுள் கொண்டவர். ஐம்பூதங்களையும் தன்னுள் உள்ளடக்கி உள்ள அனுமன் ராமநாமத்தை தவிர வேறு எதற்கும் அடங்குவதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. மார்கழி மாதம் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அனுமன் பிறந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனுமன் ஜெயந்தி (Lord Hanuman), திருநாளில் அனுமனை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வதுண்டு. அத்துடன் நம் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் மற்றும் தொல்லைகள் நீங்கும். அந்த வகையில் இன்று அனுமன் ஜெயந்தி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இன்று அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். பொரி, அவல் , கடலை, சர்க்கரை, வெண்ணை, தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை வைத்தும் வழிபடலாம்.


ALSO READ | Hanuman Jayanthi: ராம பக்தன் அனுமானின் பிறந்தநாள் இன்று


நாமக்கல் கோட்டை பகுதியில் புராதன சிறப்புப் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சாந்த சொரூபியாக கரம் கூப்பி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா விமர்சையாக நடைபெறும். 


இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு 7 - வது ஆண்டாக ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் கோக்கப்பட்ட மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதன் காரணமாக அதிகாலை முதலே திரளான பக்தர்கள் அனுமனை தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். அத்துடன் சிறப்பு பூஜையில் அமைச்சர்கள் சேகர்பாபு , மதிவேந்தன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


ALSO READ | இன்றைய ஆலய வழிபாட்டில்! வீர ஆஞ்சநேயர் கோவிலின் மகத்துவங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR