தாயை இழந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புரட்சிப்பெண்
ஒரு குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் இருந்தால் மட்டுமே கிடைக்கும்.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று கூறுவார்கள் அதையும் தாண்டி பலர் ரத்ததானம், கண்தானம், உடல் உறுப்புகள் தானம், உடல் தானம் செய்து வருகின்றனர். ஆனால் இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது ஒரு விலை மதிக்க முடியாத சம்பவம் வேலூர் மாவட்டம் காட்பாடி யை சேர்ந்த கால்நடை மருத்துவரின் மனைவி தாய்ப்பாலை தானமாக ஒரு குழந்தைக்கு வழங்கி வருகிறார் அந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து தற்போது பார்ப்போம்
வேலூர் மாவட்டம் வேலூர் அருகே உள்ள கீழ்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவிக்கு வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த அன்றே அந்தபெண் பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் தாய்ப்பாலும், தாயின் பாசமும் அந்த குழந் தைக்கு கிடைக்கவில்லை. அந்த குழந்தை தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் அந்த விவசாயி தனது கால்நடைகளை வேலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அடிக்கடி கொண்டு வருவது வழக்கம்.அப்போது அவரது மனைவி இறந்தது குறித்து மருத்துவரிடம் கூறுகிறார். குழந்தை தாயின்றி வளர்ந்து வருவதும் கால்நடை மருத்துவர் ரவிசங்கருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் தனது மனைவி சந்தியாவிடம் (வயது 26) வருத்ததுடன் தெரிவித்து உள்ளார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
மேலும் படிக்க | முட்டையை எடுத்த நபர், அட்டாக் செய்த மயில்: சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ
இந்த நிலையில் சந்தியா, தாயின்றி வளரும் அந்த ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் தானமாக கொடுக்க விரும்புவதாக தனது கணவரிடம் தெரிவித்தார். அவரும் சம்மதம் தெரிவிக்கவே கடந்த 3 மாதமாக காட்பாடியில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழ்அரசம்பட்டுக்கு பயணம் செய்து அந்த குழந்தைக்கு சந்தியா தாய்ப்பால் ஊட்டி வருகிறார்
இது குறித்து அவர் கூறுகையில் ஒரு குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் இருந்தால் மட்டுமே கிடைக்கும். எனவே அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க நினைத்தேன். என்னை பொறுத்தவரையில் தாய்ப்பால் தானம் தான் சிறந்த தானமாகும்.
ஏராளமான குழந்தைகள் தாய்ப்பால் இன்றி வளர்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பாலை தானமாக கொடுக்க முன்வரவேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு பெண்களுக்கு ஏற்பட வேண்டும். அதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன் எனக் கூறினார்.
மேலும் படிக்க | குழந்தைக்கு பெட்சீட் போர்த்திவிடும் நாய்! வைரலாகும் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR