திருவள்ளூர் அருகே நண்பனாகவும், பெற்றோராகவும் நடந்து மாணவர்களின் அன்புக்கு அடிமையான ஆசிரியர் பகவானை ஆங்கில ஊடகங்களும், பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் வெள்ளியகரம் பகுதியில் இயங்கிவரும் அரசு உயர் நிலைப்பள்ளியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் பயின்று வருகின்றனர். 


இந்த பள்ளியில், ஆங்கில ஆசிரியராக இருக்கும் பகவான் என்பவருக்கு பணியிட மாறுதல் பெற்றுள்ளார். அவர் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லக் கூடாது என மாணவர்களும் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதையடுத்து, பணிமாறுதல் பெற வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு எங்களை விட்டு போகாதீங்க சார் என கதறி அழுதனர். பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். இருப்பினும் ஆங்கில ஆசிரியரை பிரிய மனம் இல்லாமல் மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை மனம் உருகச் செய்தது. இதையடுத்து இவருடைய பணியிடை மாற்றம் நிறுத்திவைக்கப்பட்டு அதிகாரிகள் ஆய்வு பணி மேற்கொண்டு வருகின்றனர். 


இது தொடர்பாக பாலிவுட் பிரபலம் ஹிரித்திக் ரோஷன்,,! ஆசிரியர் மாணவர் இடையிலான இந்த உறவும், உணர்வும் நெஞ்சை உருக்குகிறது என தெரிவித்துள்ளார்.



இதேபோன்று, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், குரு, சிஷ்யா என பதிவிட்டு பகவான் ஆசிரியருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.