கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த ஷர்மிளா. தமிழ்நாட்டிலேயே முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற பெயருக்கு சொந்தக்காரர். இவர் கோவை காந்திபுரம் முதல் சோமனூர் செல்லும் சாலையில் வி.வி என்ற தனியார் பேருந்தில் பணிபுரிந்து வந்தார். இவர் குறித்து சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் பல வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலானது. இதையடுத்து இவர் பிரபலமான நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணம் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இவரைத்தொடர்ந்து கனிமொழி எம்.பியும் இவர் பேருந்தில் பயணித்து இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணி நீக்கம்: 


தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் சில நாட்களுக்கு முன்பு காந்திபுரத்தில் இருந்து ஹோப்ஸ் வரை பயணம் செய்தார். கனிமொழி பயணத்தின் போது அந்த பேருந்தில் பணியாற்றி வரும் பெண் பயிற்சி நடத்துனர் கனிமொழி எம்பி இடம் பேருந்து பயணத்திற்கான பயண சீட்டு கேட்டுள்ளார் இதைத்தொடர்ந்து கனிமொழி சிரிப்புடன் தனது உதவியாளர் மூலம் டிக்கெட் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து கனிமொழி ஹோப்ஸ் பகுதியில் இறங்கி வாழ்த்துக்களை தெரிவித்து சென்றுவிட்டார். இந்த நிகழ்வு நடந்த சில மணி நேரங்களிலேயே ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 


மேலும் படிக்க | சொந்த செலவில் மக்களுக்கு நலத்திட்ட உதவி செய்கிறது தேமுதிக - விஜய பிரபாகரன்!


வாக்குவாதத்தால் ஏற்பட்ட விளைவு..


கனிமொழியிடம் டிக்கெட் கேட்ட பயிற்சி நடத்துனரிடம், “என்னை பார்க்க வந்த எம்.பி.கனிமொழியிடம் ஏன் டிக்கெட் கேட்டீர்கள்?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பயிற்சி நடத்துனர் ஒரு பதிலை அளிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிப்போயுள்ளது.  இதைத் தொடர்ந்து ஷர்மிளா காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்தினை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்று பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு இடத்தில் நடந்ததை தெரிவித்துள்ளார். அப்போது ஷர்மிளாவின் தந்தையும் உடன் இருந்துள்ளார். இதன்பின், ஷர்மிளா கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பணியில் இருந்து தன்னை பேருந்து உரிமையாளர் நீக்கிவிட்டதாக கூரினார்.


கார் வாங்கிக்கொடுத்த கமல்..


ஷர்மிளா, பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து, சவாலான பணியை திறம்படச் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு தரப்பினர் இடையே இருந்தும் பல பாராட்டுதல்களைப் அவர் பெற்றுள்ளார். இந்த நிலையில், கமல் பண்பாட்டு மையம் சார்பில் ஷர்மிளாவிற்கு கார் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பேருந்து ஓட்டுநராக இருந்த ஷர்மிளா இனி சொந்தமாக கார் ஓட்டி தொழில் முனைபவராக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்துள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். 


கமலின் அறிக்கை:


இதுகுறித்து கமல் பின்வருமாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்: “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா. பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து, சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன்.ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை.  கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார். ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில், ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ” என்று குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | திமுகவை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி - சேலத்தில் பரபரப்பு பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ