சொந்த செலவில் மக்களுக்கு நலத்திட்ட உதவி செய்கிறது தேமுதிக - விஜய பிரபாகரன்!

கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் குறித்து தயவுசெய்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்ப வேண்டாம் என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 26, 2023, 08:19 AM IST
  • தேமுதிக சொந்த செலவில் மக்களுக்கு நலத்திட்ட உதவி செய்கிறது.
  • தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் முடிவு செய்வார்.
  • கண்துடைப்புக்காக மட்டுமே தமிழக அரசு மதுக்கடைகளை மூடி உள்ளது.
சொந்த செலவில் மக்களுக்கு நலத்திட்ட உதவி செய்கிறது தேமுதிக - விஜய பிரபாகரன்! title=

தமிழகத்தில் ஊழல் செய்து, கைது செய்த பின்னரும் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என அமைச்சர் பட்டியலில் இலாக்கா இல்லாத அமைச்சராக தமிழக அரசு வைத்திருப்பது தமிழக முதல்வர் ஸ்டாலின், ஊழலுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக தான் உள்ளது என தேமுதிகவின் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் தேமுதிக கட்சியின் சார்பில் கொள்கை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாராக கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்று தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர் திமுக, அதிமுக ஊழல் செய்து கட்சியை வளர்த்து வருகிறார்கள். ஆனால், தேமுதிக கட்சி மட்டும் சொந்த செலவில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது என்றார். 

மேலும் படிக்க | நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் முக்கிய அறிவுரை!

vijayaprabakasarn

உதயநிதி ஸ்டாலின் நான்கு முறை முதல்வராக இருந்தவரின் பேரனாகவும், மேயராக இருந்த தந்தையின் மகனாக வந்தார். ஆனால் தனது தந்தையின் உடல் நலம் குறைவு காரணமாக எனது கனவு ஆசைகளை துறந்து விட்டு அரசியலுக்கு மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக வந்ததாக கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் முடிவு எடுப்பார் என கூறினார்.  தமிழகத்தில் 500 மதுக்கடைகள் தமிழக அரசு கண்துடைப்புக்காக மட்டுமே தமிழக அரசு மூடி உள்ளது, இதனால் கடையடைப்பு குறித்து முழு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இந்தியாவில் எதிர்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்தாலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் ஆதரவு இருப்பதால் இதற்கு எல்லாம் பதில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தான் தெரியும் என்றார்.  விஜய் அரசியலில் வருவது குறித்து தெளிவாக இதுவரை அவர் எந்த இடத்திலும் பேசவில்லை. அதனால் அவர் அரசியலுக்கு வருவது குறித்து யூகத்தின் அடிப்படையில் பேசுவது முறையாக இல்லை. இதனால் லியோ படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கிறேன் எனக் கூறினார். கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் குறித்து தயவுசெய்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்ப வேண்டாம் பூர்ண உடல்நலத்துடன் உள்ளார் என்பதை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து பேசியவர் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஊழல் நடவடிக்கையில் கைது செய்த நிலையில் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்பான தமிழக அரசு அறிவித்திருப்பது தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊழலுக்கு ஆதரவு தருவது போல் இருப்பதாக விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் ரயிலை கவிழ்க்க சதி - காவல்துறை தீவிர விசாரணை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News