Kamal Haasan: Project K படத்தில் இணைந்த கமல் ஹாசன்..! இதுதான் அவரது கதாப்பாத்திரமா?

Kamal Haasan in Project K: நடிகர் கமல் ஹாசன், பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் நடிப்பதை அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Jun 25, 2023, 12:50 PM IST
  • பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம், ப்ராஜெக்ட் கே.
  • கமல் ஹாசன் இதில் வில்லனாக நடிக்கிறார்.
  • இதுகுறித்த அறிவிப்பை ப்ராஜெக்ட் கே படக்குழு வெளியிட்டுள்ளது.
Kamal Haasan: Project K படத்தில் இணைந்த கமல் ஹாசன்..! இதுதான் அவரது கதாப்பாத்திரமா?  title=

ரசிகர்களால் ‘உலக நாயகன்’ என அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன். இவர், மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ப்ராஜெக்ட் கே படத்தில் கமல்:

சில நாட்களுக்கு முன்னரே கமல் ஹாசன் பிரபாஸ் உடன் சேர்ந்து நடிக்கிறார் ப்ராஜெக்ட் கே படத்தில் இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் முன்னரே வெளியானது. இந்த தகவலை ப்ராஜெக்ட் கே படத்தை தயாரிக்கும் வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. 

இது குறித்து அந்நிருவனம் வெளியிட்டுள்ள பதிவில், இந்த படத்தின் மூலம் பல திரையுலக சூப்பர் ஸ்டார்ஸகளை ஒன்றாக இனைப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், “எங்களுக்கு இந்த உலகை மறைக்கும் அளவுக்கு நிழல் கொண்ட ஒருவர் தேவைப்பட்டார். அது ஒருவரால் மட்டும்தான் முடியும். அவர்தான் உலக நாயகன்..” என்று கமல் ஹாசனுக்கு மாஸ் ஆன இண்ட்ரோவையும் அப்படக்குழு கொடுத்துள்ளது. 

மேலும் படிக்க | போதை பொருளுக்கு நிறைய பேர் அடிமையாகிட்டாங்க- ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம்

கமலின் கதாப்பாத்திரம் என்ன? 

இந்தியன் 2 படத்தில் பிசியாக நடித்து வரும் கமல், அடுத்து ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்கிறார் என எப்போதோ தகவல்கள் வெளிவந்து விட்டன. இப்போது ப்ராஜெக்ட் கே படக்குழுவே இந்த மிகப்பெரிய அறிவிப்பை கொடுத்துவிட்ட நிலையில் இவரது கதாப்பாத்திரம் குறித்த ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கமல், கொடூர வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த படத்தில் 20 நாட்கள் நடிக்க கமலிற்கு 150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படியோ, உலக நாயகனின் தரிசனத்தை பான் இந்தியா படத்தில் பார்க்க இருப்பதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். 

பெரிய பட்ஜெட் திரைப்படம்: 

பாகுபலி படத்திற்கு பிறகு, பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரிப்போரின் கைகளில் வசமாக சிக்கிக்கொண்ட நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பிறகு இவர் சினிமா வாழ்க்கை கதவை தட்டுவது எல்லாமே, கோடி கணக்கில் செலவாக இருக்கும் படங்கள்தான். பாகுபலி படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான சஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் போன்ற அனைத்து படங்களும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படங்கள். இதில் சோகம் என்னவென்றால், இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெறவில்லை. இதற்கு அடுத்து இவர் சைன் செய்த மிகப்பெரிய படம், Project K. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பான் இந்தியா அளவில் உருவாகிவரும் இப்படத்தை நாக் அஷ்வின் என்ற தெலுங்கு இயக்குநர் டைரக்டு செய்கிறார். இந்த படம், சுமார் 500 கோடி அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தீபிகா படுகோன், திஷா பதானி என இரண்டு கதாநாயகர்கள் உள்ளனர். அமிதாப் பச்சன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இவர்களுடன் நடிகர் கமல் ஹாசனும் இணைந்துள்ளார். 

ரிலீஸ் எப்போது? 

சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையாக உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே திரைப்படம், பல மடங்கு கிராஃபிக்ஸ் காட்சிகளையும் ஆக்‌ஷன் காட்சிகளையும் கொண்டுள்ளது. விருவிருப்பாக நடைப்பெற்று வரும் இப்படத்தின் வேலைகள் இந்த ஆண்டின் இறுதியில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகையர் திலகம் (மகாநதி) படத்தை எடுத்த நாக் அஷ்வின் இந்த படத்தை எடுத்துள்ளதால் அவர் மீதும் ப்ராஜெக்ட் கே படத்தின் கதையின் மீதும் ரசிகர்களுக்கு பயங்கர எதிர்பார்பு உள்ளது. படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 12ஆம் தேதி வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் கமல் ஹாசன் மட்டுமன்றி இன்னொரு தமிழரும் பணிபுரிந்து வருகிறார். அவர், சந்தோஷ் நாராயணன். தமிழ்நாட்டு இளைஞர்களை தனது துள்ளல் இசையால் ஈர்த்த இவர், ப்ராஜெக்ட் கே படம் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் இளைஞர்களை கவர உள்ளார். இதனால், ரசிகர்கள் அனைவரும் டபுள் மடங்கு சந்தோஷத்தில் உள்ளனர். 

மேலும் படிக்க | அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது - நடிகர் சதீஷ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News