விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு செப்டம்பர் 19, 2020-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை அமலுக்குக் கொண்டு வந்தது.  இதன் மூலம் விவசாயிகள் வேளாண்மைக்கு உதவும் விளைபொருட்களை வாங்கவும், விற்கவும் இந்த மசோதாக்கள் உதவும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இருப்பினும், இந்தத் திட்டத்தை அமல்படுத்தியதில் இருந்தே விவசாயிகள் பலரும் மத்திய அரசை எதிர்த்து தொடர் போராட்டங்களை நிகழ்த்தி வந்தனர்.  மேலும் இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பல விவசாய அமைப்பினரும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர் இதுதொடர்பான வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நடந்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின்


அதனையடுத்து மத்திய அரசின் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் விவசாயிகள் பின்வாங்காமல், இந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரையில் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.  இந்நிலையில் இன்று(19/11/2021) மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெறப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக கூறினார்.  விவசாயிகளின் நலனுக்காக தான் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.  இருப்பினும், எவ்வளவோ முயற்சி செய்தும் சிலருக்கு எங்களால் இதை புரிய வைக்க முடியவில்லை.  அதனால் இந்த சட்டத்தை திரும்பப் பெறுகிறோம், இதுபற்றி குளிர்கால கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 


 



இந்த அறிவிப்பிற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் கார்த்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  அதாவது "மூன்று விவசாயத் திட்டங்களை திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையே ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒரு வருட போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்கள் புரிந்து கொண்ட அரசு இருக்கும் அன்பும் நன்றியும்." என்று நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


ALSO READ ஹாலிவுட் படங்களில் இருந்து எடுக்கப்பட்ட ரஜினி, கமல் திரைப்படங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR