Sathyaraj Mother Died: நடிகர் சத்யராஜ் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் ஒரு கடவுள் மறுப்பு கொள்கையுடையவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

94 வயதான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார்  அப்பார்ட்மெண்டில் வசித்து வந்தார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.


மேலும் படிக்க | 'என்றும் நினைவில் நேசமணி' தனிமுத்திரை பதித்த இயக்குநர் சித்திக் - தமிழ் படங்கள் இதோ!



இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் அதே பகுதியில் உள்ள கேஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே இன்று (ஆக. 11) மாலை 4 மணி அளவில் மரணம் அடைந்துள்ளார்.


இந்த செய்தியை அறிந்த மகன் சத்யராஜ் ஹைதராபாத் படப்பிடிப்பில் இருந்து கோவை விரைந்துள்ளார். அதேபோல சத்யராஜின் தாயார் மரணத்திற்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் நாளை (ஆக. 12) சத்யராஜின் தாயார் உடல் தகனம் செய்ய இருப்பதால் பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் கோவை விரைந்துள்ளனர்.



முதல்வர் இரங்கல்


நடிகர் சத்யராஜின் தாயார் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்,"நடிகர்‌ சத்யராஜின்‌ தாயார்‌ நாதாம்பாள்‌ காளிங்கராயர்‌, வயது மூப்பின்‌ காரணமாக இன்று (ஆக. 11) மாலை இயற்கை எய்தினார்‌ என்பதை அறிந்து வருந்துகிறேன்‌. அரவணைத்து ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும்‌ சத்யராஜுக்கும்‌, அவரது குடும்பத்தினருக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, ஆறுதலையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌" என குறிப்பிட்டுள்ளார். 



மேலும் படிக்க | அங்காடி தெரு சிந்துவின் உயிரை பறித்த மார்பக புற்றுநோய்... வராமல் தடுப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ