தாய் மொழி மீது கை வைக்காத வரை ஏற்கப்படும் -கமல்ஹாசன்!
தாய் மொழி மீது கை வைக்காத வரை மத்திய அரசின் கருத்துக்கள் ஏற்கப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்!
தாய் மொழி மீது கை வைக்காத வரை மத்திய அரசின் கருத்துக்கள் ஏற்கப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்!
இந்தி அனைத்து இந்தியர்களுக்கும் ஒன்றிணைக்கும் மொழியாக மாறுவது குறித்து இந்த வார தொடக்கத்தில் அமித் ஷா கூறிய கருத்து, இந்தி அல்லாத மொழி பேசும் மாநிலங்களுக்கு இந்தியை திணிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் முன்னோட்டமாக பலதரப்பில் இருந்து விமர்சிக்கப்பட்டது.
இதனையடுத்து தனது சர்ச்சைகுறிய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள அமித் ஷா., "நான் ஒருபோதும் மற்ற பிராந்திய மொழிகளில் இந்தி திணிக்கக் கேட்கவில்லை, ஒருவரின் தாய்மொழிக்குப் பிறகு இந்தி இரண்டாவது மொழியாகக் கற்க மட்டுமே நான் கோரியிருந்தேன். நானே இந்தி அல்லாத குஜராத் மாநிலத்திலிருந்து வந்தவன். எனது கருத்தை கொண்டு சிலர் அரசியல் செய்ய விரும்பினால், அது அவர்களின் விருப்பம்" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன் அவர்களிடன் இதுகுறித்து வினவுகையில்., தாய் மொழி மீது கை வைக்காத வரை அவர்களின் கருத்துக்கள் ஏற்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, நாட்டுக்கு பொதுவான மொழி அவசியம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தது குறித்து கேட்கையில், பொதுவான மொழியாக ஆங்கிலம் உள்ளதாக கமல்ஹாசன் குறிப்பிட்டார்
பிகில் திரைப்பட விழாவில் சுபஸ்ரீ மரணம் குறித்து விஜய் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த கமல்ஹாசன், மேடையை சரியாக பயன்படுத்தியுள்ளார் விஜய். விஜயின் செயலுக்கு எனது பாராட்டுக்கள் என குறிப்பிட்டுள்ளார்.