Actor Vijay Political Party Name's Thamizhaga Vetri Kazhagam in Tamil : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்குபவர், விஜய். ரசிகர்களால் அன்புடன் ‘தளபதி’ என்று அழைக்கின்றனர். இதுவரை, தனது படங்களிலும் பட விழாக்களிலும் அரசியல் பேசி வந்த நடிகர் விஜய், தற்போது தனது அரசியல் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியல் கட்சியின் பெயர்:


விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றிக்கழகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 



இது குறித்து விஜய் டிவிட்டர் பதிவையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த அறிக்கையில் அவர் பின்வருமாறு கூறியிருக்கிறார்.


“அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது”


விஜய், தனது அறிக்கையில், ‘விஜய் மக்கள் இயக்கம்’ பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது” என்று கூறியிருக்கிறார். 


மேலும், தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.


மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.  தன்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து தனது பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பம் என்றும் விஜய் குறிப்பிட்டிருக்கிறார். 


மேலும் படிக்க | Vijay: முழு நேர அரசியலில் இறங்கும் விஜய்! கடைசி படம் இதுதான்..இயக்குநர் யார் தெரியுமா?


தொடர்ந்து, ”’எண்ணித் துணிக கருமம்’ என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை:


விஜய், இந்த ஆண்டில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு தனது அறிக்கையில் அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார். ”வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். 


மேலும் படிக்க | விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் பிரபல இயக்குநர் யார் தெரியுமா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ