அரசுக்கும் காவல்துறைக்கும் மிக்க நன்றி: நடிகர் விவேக் குடும்பத்தினர்
தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என அன்புடன் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் இறப்புக்கு, திரையுலக பிரபலங்கள் உட்பட பலர், அதிர்ச்சியையும் வேதனையையும் வெளியிட்டனர்.
சிரிப்போடு சேர்த்து சிந்தனையையும் ஊட்டிய நடிகர் விவேக், அனைவரையும் மீளாத் துயரில் மூழ்கடித்து விட்டு, நேற்று அதிகாலை இறந்து விட்டார்.
தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என அன்புடன் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் இறப்புக்கு, திரையுலக பிரபலங்கள் உட்பட பலர், அதிர்ச்சியையும் வேதனையையும் வெளியிட்டனர். பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்தனர்.
நடிகர் விவேக்கிற்கு (Actor Vivek) கவுரவம் அளிக்கும் விதமாக அவரது இறுதிச் சடங்கின்போது காவல்துறை மரியாதை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், அவரது உடல், காவல் துறை மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
ALSO READ | நிழலும், நிஜத்திலும் சமூகத்தின் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக்: பிரதமர் மோடி
மாரடைப்பினால் இறந்து போன நடிகர் விவேக் உடல் திரையுலகினர், ரசிகர்கள் புடைசூழ ஊர்வலமாக விருகம்பாக்கம் இடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அவரது மூத்த மகள் தேஜஸ்வினி, தனது தந்தையின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்து சிதைக்கு தீ மூட்டினார்.
இந்நிலையில், இன்று விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவரது மனைவி அருள்செல்வி, தனது கணவருக்கு கவுரவம் அளிக்கும் வகையில், அரசு மரியாதையுடன் உடலை தகனம் செய்து, இறுதி மரியாதை அளித்ததற்காக, மத்திய மாநில அரசுகள், காவல் துறையினர், ஊடகங்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செய்த, ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
நடிகர் விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பிஜே. அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதையும் பற்றும் கொண்டவர். அவரது அறிவுரைகளை நிஜ வாழ்க்கையில் கடை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல்கலாம் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், ஒருகோடி மரம் நடும் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டுச் சென்றதோடு மட்டுமல்லாமல், இதுவரை 33.5 லட்சம் மரக் கன்றுகளை நட்டதோடு மட்டுமால்லாமல் இளைஞர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவித்து வந்தார்.
ALSO READ | நடிகர் விவேக் தனது அற்புத திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர்: அமித் ஷா
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR