நடிகர் விவேக் தனது அற்புத திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர்: அமித் ஷா

நேற்று காலை நடிகர் விவேக் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு, மயக்கமானார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 17, 2021, 02:56 PM IST
  • நேற்று காலை நடிகர் விவேக்கிற்கு, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு, மயக்கமானார்.
  • உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
  • எனினும் சிகிச்சை பலனின்றி அனைவரையும் மீளாத் துயரில் மூழ்கடித்து விட்டு இறந்து விட்டார்.
நடிகர் விவேக் தனது அற்புத திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர்: அமித் ஷா title=

மக்களுக்கு பகுத்தறிவை ஏற்படுத்த, மிகவும் சீரியஸான ஒரு விஷயத்தை கூட காமெடியாக எடுத்துக் கூறி, தனது நகைச்சுவையால் அனைவரையும் கவலைகளை மறந்து சிரிக்க வைத்த நடிகர் விவேக், தற்போது தனது மரணத்தினால், அனைவரையும் அழ வைத்து விட்டு சென்று விட்டார். 

நேற்று காலை நடிகர் விவேக் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு, மயக்கமானார். உடனடியாக அவர் வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர், அனைவரையும் மீளாத் துயரில் மூழ்கடித்து விட்டு இறந்து விட்டார்.  

திரையுலக பிரபலங்கள் உட்பட பலர், அதிர்ச்சியையும் வேதனையையும் வெளியிட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் (PM Narendra Modi), நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்தார். 

ALSO READ |  நிழலும், நிஜத்திலும் சமூகத்தின் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக்: பிரதமர் மோடி

தற்போது, அமித் ஷாவும், நடிகர் விவேக்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 

’நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையுற்றேன். அவரது நடிப்பின் அற்புதமான திறமை அவரை மிகச்சிறந்த நடிகராக்கியது. தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர். அதற்காக எப்போதும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல். ஓம்சாந்தி’ என ட்வீட் செய்துள்ளார்.

ALSO READ | சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும்..

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News