நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று காலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் விவேக் (Vivekh) இன்று சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது, சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.


தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் பேசிய நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) குறித்து வதந்திகள் பொதுமக்களிடையே பரவி வருகின்றன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மருத்துவமனையில் நான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்.


முகக்கவசம், கைகளை அடிக்கடி கழுவுதல், தனிமனித இடைவெளியும் ஆகியவைதான் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு. ஆனால், கொரோனா தடுப்பூசி மட்டும்தான் மருத்துவ ரீதியான ஒரேயொரு பாதுகாப்பு. இதுதான் உயிரைக் காப்பாற்றுகின்ற பாதுகாப்பு. இதைச் செலுத்திக்கொண்டால் கொரோனா தொற்று (Coronavirus) வராது என்பதல்ல. வந்தாலும் உயிரிழப்பு இருக்காது. இரு டோஸ் செலுத்திக்கொண்ட இரு வாரங்களுக்குப் பின்புதான் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் உண்டாகும் என்றார். 


ALSO READ | குழந்தைகளை  குறிவைக்கும் உருமாறிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு 


இந்நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செய்திகள் வெளிவந்துள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR