Actress Kasthuri News | தெலுங்கர்கள் குறித்து அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான சம்மனை வழங்க காவல்துறை அவரின் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றபோது, வீடு பூட்டியிருந்தது. கஸ்தூரியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அதுவும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் காவல்துறையினர் சம்மன் வழங்க முடியவில்லை. இதனால், தலைமறைவாகியிருக்கும் நடிகை கஸ்தூரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நவம்பர் 3 ஆம் தேதி சென்னை எழும்பூரில் பிராமணர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பொங்கல் பரிசு தொகுப்பு : ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கப்போகும் சர்பிரைஸ்..!


அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசும்போது, 300 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கர்கள் எல்லாம் மன்னர்களுக்கு அந்தப்புர சேவைக்கு வந்தவர்கள், அவர்கள் எல்லாம் தமிழ்கள் ஆகும்போது, எப்போதோ வந்த பிராமணர்கள் தமிழர்கள் ஆகமாட்டார்களா? என கேள்வி எழுப்பினார். கஸ்தூரியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது. தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களிலும் கஸ்தூரியின் பேச்சு தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் எல்லாம் கஸ்தூரியின் பேச்சுக்கு எழுந்த நிலையில், உடனே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை கூட்டினார். அதில் பேசும்போது கூட கஸ்தூரி, நான் தெலுங்கு மக்களை அப்படி சொல்லவே இல்லை, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகள் என் பேச்சை தவறாக பரப்புகிறார்கள் என தெரிவித்தார்.


மேலும், நான் தவறாக பேசவில்லை, இருப்பினும் என்னுடைய பேச்சில் யாராவது புண்பட்டிருந்தால் அவர்களுக்காக என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார் கஸ்தூரி. இருப்பினும் கஸ்தூரிக்கு கண்டனங்கள் குவிந்து கொண்டே இருந்தது. காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது. சென்னை எழும்பூரில் தெலுங்கு அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோயம்பேடு காவல் நிலையத்திலும் 2 பிரிவுகளின் கீழ் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


இந்த சூழலில் சென்னை எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த சம்மனை நடிகை கஸ்தூரியிடம் வழங்க சென்றனர். அப்போது அவரது சென்னை போயஸ் கார்டன் வீடு பூட்டியிருந்தது. செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதாவது காவல்துறை சம்மனை வாங்காமல் கஸ்தூரி தலைமறைவாகியுள்ளார். அவரை இப்போது எழும்பூர் காவல்துறை தேடிக் கொண்டிருக்கிறது. காவல்துறை கைது செய்யும் என்ற அச்சத்தில் அவர் தலைமறைவாகியுள்ளாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுவரை கஸ்தூரி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.


மேலும் படிக்க | Ration Card | ரேஷன் கார்டு முகவரி மாற்றுவதில் சிக்கலா? இதை பாலோ பண்ணுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ