நடிகை ரோஜா சென்ற விமானத்தில் கோளாறு..! அவசரமாக பெங்களூரில் தரையிறக்கம்
நடிகை ரோஜா விமானம் திருப்பதியில் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் அவசரமாக பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, ஆந்திர அரசியல் களத்திலும் ஜொலித்து வருகிறார். ஜெகன்மோகன் ரெட்டி தலமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸில் எம்.எல்.ஏவாக இருக்கும் அவர், இன்று விமானத்தில் ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு பயணம் செய்துள்ளார். திருப்பதி விமான நிலையத்தை அடைந்தபோது, அவருடைய விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் சூழல் உருவானதால், விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பெங்களுருவை நோக்கி திருப்பியுள்ளார்.
ALSO READ | New CDS: பிபின் ராவத்தின் பதவி யாருக்கு? முப்படைகளின் புதிய தலைமைத் தளபதி நியமனம்
இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகை ரோஜா, ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற விமானத்தில் பயணிக்கிறேன். தரையிறங்கும் சமயத்தில் திடீரென டெக்னிக்கல் கோளாறு இருப்பதாக அறிவித்துள்ளார்கள் எனக் கூறினார். அவரின் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இருப்பினும், விமானம் பெங்களூருவுக்கு திருப்பவிடப்பட்டு, பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலையடுத்து சினிமாத்துறை வட்டாரங்கள் நிம்மதியடைந்தனர். அண்மையில், இந்திய முப்படைகளின் ராணுவ தளபதி பிபின் ராவத் சென்ற விமானம் குன்னூர் அருகே எதிர்பாரதவிதமாக விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் பிபிரன் ராவத் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிர்த்தியாகம் செய்தனர். குரூப் கேப்டன் வருண் சிங், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விமான விபத்து நாட்டையே உலுக்கியது. அந்த சோகத்தின் வடுக்கள்கூட முழுமையாக ஆறவில்லை. இந்நிலையில், நடிகை ரோஜா வெளியிட்ட இந்த செய்தி பலரையும் கவலையடையச் செய்தது.
ALSO READ | Indian Army: இந்திய ராணுவத்தின் புதிய சீருடையில் டிஜிட்டல் பிரிண்ட்! காரணம் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR