அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் (Former AIADMK minister) மீது திரைப்பட துணை நடிகை சாந்தினி புகார் அளித்தார். மணிகண்டன் தனக்கு வாக்கு அளித்து ஏமாற்றினார், கொலை மிரட்டல் விடுத்தார் என அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் நடிகை சாந்தினி (Actress Chandini). அவர் அளித்த புகாரின் பேரில் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஏமாற்றியது, கொலை மிரட்டல் அளித்தது, கருக்கலைப்பு செய்ய வைத்தது என்பது போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் (M Manikandan) இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு எதிராக அவருக்கு முஞ்சாமீன் அளிக்கக்கூடாது என நடிகை சாந்தினி (Actress Chandini) தரப்பு கூறியது.


ALSO READ | CBCID Arrest: டெல்லியில் சிவசங்கர் பாபா கைது 


இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் (Madras Highcourt), ஜூன் 9 ஆம் தேதி வரை மணிகண்டனைக் கைது செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. இதனால் மணிகண்டனுக்கு ஒரு சிறிய நிவாரணம் கிடைத்தது. மேலும் மீண்டும் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த ஜூன் 16 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதாக கூறி, அவரது முன்ஜாமீன் மனுவை நீதிபதி அப்துல் குத்தூஸ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 


இதற்கிடையில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர். 


இந்நிலையில் தற்போது  பெங்களூரில் தங்கி இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.


ALSO READ |  சினிமா நடிகை கொடுத்த பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR