சென்னை: தமிழக சிபிசிஐடி போலீசாரால் டெல்லியில் சுற்றிவளைக்கப்பட்ட சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். அவரை சென்னைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. சென்னையில் தான் சிபிசிஐடி போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு பள்ளியின் நிறுவனராக இருந்த சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவருடையப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினார்கள்.
எனவே,சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ (POCSO Act) உட்பட 8 பிரிவுகளின்கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர்.
இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிவசங்கர் பாபா சார்பில் சான்றுகளும், புகைப்படங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
Also Read | Most Weird Airlines: உலகின் 4 வித்தியாசமான விமான நிறுவனங்கள்
டேராடூனில் உள்ள சிவசங்கர் பாபாவை நேரடியாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி குழு விரைந்தது. அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனிடையே டேராடூனில் இருந்த சிவசங்கர் பாபா தப்பித்து சென்றுள்ளார்.
73 வயதான சிவசங்கரை கைது செய்வதற்காக CBCID குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சிவசங்கர் டெல்லியில் இருப்பது தெரிந்து அங்கு விரைந்த CBCID போலீசார், கைது செய்தனர்.
தன்னை கிருஷ்ணர் என்று சொல்லி மாணவிகளை மயக்கும் சிவசங்கர், முந்தைய பிறப்பில் அந்த பெண் 'கோபிகா'வாக இருந்ததாக நம்பவைப்பார். அந்த பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டு, அதன் முக்கியத்துவத்தைப் பற்றி போதிப்பார். தன்னை கடவுளின் அவதாரமாக காட்டிக் கொண்டு இரண்டு தசாப்தங்களாக அவரது பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்துள்ளன.
Also Read | Education: தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஆணையம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR