சென்னை திரு.வி.க நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு ஆடு தொட்டி பகுதியில் பகுதி செயலாளர் முகுந்தன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பழங்கள் மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.  அதன் பிறகு செய்தியாளர்களிடம்  ஜெயக்குமார் கூறியதாவது, கர்நாடகாவில் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே எந்தவித பாதிப்பும் கிடையாது. ஏற்கனவே கர்நாடகாவில் நாங்கள் வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு செய்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதியில் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதி கண்டிப்பாக அந்த இடத்தில் வெற்றி பெறுவோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க: உயரமோ 3 அடி.. ஆனால் தன்னம்பிக்கையோ..! அரசியலில் சாதிக்க துடிக்கும் நபரின் பாசிட்டீவ் கதை!



தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி உள்ளது, அதில் பிஜேபி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இருக்கும் என எங்களது பொது செயலாளர் கூறியுள்ளார். அதனை அமித்ஷாவும் உறுதிப்படுத்தி உள்ளார். தமிழ்நாடு வேறு கர்நாடகா வேறு, சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும், ஒரு சித்தாந்தம் இருக்கும். சித்தாந்தம் ரீதியிலும் சரி கொள்கை ரீதியிலும் சரி பிஜேபியில் இருந்து அதிமுக வேறுபடுகிறது, ஆனால் கூட்டணியில் உள்ளது. கூட்டணியை பொருத்தவரை சித்தாந்தத்திற்கும் கொள்கைக்கும் சம்பந்தம் கிடையாது.  காங்கிரஸ் கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் சேர மாட்டோம் என்று கூறினார்கள், ஆனால் தற்போது கூட்டணியில் உள்ளார்கள். அதேபோல கூடா நட்பு கேடாய் முடியும் என கலைஞர் கூறினார். காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்று கூறினார், தற்போது கூட்டணியில் தான் உள்ளார்கள், அது வேறு இது வேறு. 


நோன்பு திறப்பு நிகழ்ச்சி என்பது தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, ஜெயலலிதா காலத்தில் இருந்து இது நடைமுறையில் உள்ளது. இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது, பிஜேபியை பொறுத்தவரை அடக்கி வாசிப்பது நல்லது. அது அவர்களுக்கு வருகின்ற தேர்தலுக்கு நல்ல விஷயமாக இருக்கும். அடக்கி வாசிக்க வில்லை என்றால் வருகின்ற தேர்தலில் அது குறித்து அவர்களுக்கு புரியும், இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என்று தெரிவித்தார். அம்மா உணவகங்களை பொருத்தவரை லாப நோக்கத்தோடு செயல்படாமல் சேவை மனப்பான்மையோடு அரசு செயல்பட வேண்டும், இதில் லாப நஷ்ட கணக்கை பார்க்க கூடாது என தெரிவித்தார்.


மேலும் படிக்க | AIADMK Minister Jayakumar: அதிமுக நெருப்பு..டச் பண்ணாதீங்க அண்ணாமலை - கடுகடுத்த ஜெயக்குமார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ