சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267 ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு அதிமுக சார்பில் தமிழ்நாடு எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, மலர் தூவியும் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.
திமுக ஊழல் கட்சி
அப்போது, திமுக என்பது ஒரு ஊழல் கட்சி. அவர்கள் குடும்பம் மட்டுமே வளர வேண்டும் என்று நினைத்த நிலையில் அதிமுக என்ற இயக்கம் உருவானது. திமுகவின் சொத்து பட்டியலை அண்ணாமலை தற்பொழுது வெளியிட்டுள்ளார். அந்த பணத்தை பறிமுதல் செய்து பொதுமக்களின் கஷ்டங்களை தீர்க்கலாம். அணைகளை கட்டலாம். பல நலத்திட்டங்களை செய்யலாம். அண்ணாமலை இன்று தான் சொல்கிறார். ஆனால் நாங்கள் வாழ்நாள் முழுவதும் திமுக ஊழல் கட்சி என்று சொல்லிக் கொண்டு வருகிறோம்.
மேலும் படிக்க | தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த முத்திரை தாள் கட்டணம்! இவ்வளவு உயர்வா?
அண்ணாமலைக்கு வார்னிங்
திமுக சார்பில் மன்னிப்பு கேட்க சொன்னதற்கு அண்ணாமலை தான் பதில் சொல்ல வேண்டும். அதிமுகவுடன் அண்ணாமலை விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போல தான். அதிமுகவில் அனைவரின் சொத்து விவரங்களையும் தெளிந்த நீரோடை போல தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கிறோம். ஊழல் சொத்துக்கள் இருந்தால் பறிமுதல் செய்து கொள்ளுங்கள். மடியிலே கனமில்லாத போது வழியில் பயம் எதற்கு. தைரியமாக சொல்கிறேன் எது வேண்டுமானாலும் பண்ணுங்கள் நாங்கள் அதை எதிர் கொள்வோம் என்றார்.
அதிமுக கூட்டணியில் பாஜக
தொடர்ந்து தேசிய ஜெயக்குமார், தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருக்கிறது. ஆக பாஜக - அதிமுக கூட்டணி தொடர்கிறது என்றார்.
மேலும் படிக்க | கூட்டுறவு வங்கிகள் மூலம் இத்தனை கோடி கடனா? வெளியான அதிர்ச்சி தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ