ஒற்றைத் தலைமையா, இரட்டைத் தலைமையா விவாகரத்தில் எடப்பாடி பழனிசாமி வென்று இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கிறார். கடந்த 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் அவர் பொறுப்பேற்க அதே நாளில் அதிமுகவுக்குள் விரும்பத்தகாத நிகழ்வுகளும் அரங்கேறின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இபிஎஸ் தரப்புக்கும், ஓபிஎஸ் தரப்புக்கும் மோதல் முற்ற பலர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தின் கதவை உடைத்து அங்கிருந்த ஆவணங்களையும், கோப்புகளையும் தங்கள் வாகனங்களில் வைத்துக்கொண்டனர்.


நிலைமை இப்படி இருக்க வருவாய்த் துறை சார்பில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தது. இந்தச் சம்பவம் அக்கட்சியின் வரலாற்றில் கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.



இதனையடுத்து கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்ததற்கு எதிராக இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


மேலும் படிக்க | மிஸ்டர் ஹிட்லர் : மன்னராட்சியை கொண்டுவர துடிக்கிறீர்களா! - கமல்ஹாசன் காட்டம்


அந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், பொதுக்குழு கூட்டம் நடந்தபோது கட்சி தலைமை அலுவலகத்துக்குள் சமூக விரோதிகள் நுழையக் கூடும் எனக் கூறி பாதுகாப்பு கோரி காவல் துறைக்கு மனு அளித்தும்,  போதிய காவல் துறை பாதுகாப்பு வழங்காததால் வன்முறை சம்பவம் நடந்துள்ளது.


பன்னீர்செல்வம் தரப்பினர் கட்சி தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கம்ப்யூட்டர், கோப்புகளை எடுத்துச்சென்றுவிட்டனர். கலவரம் ஏற்பட்டபோது தடுக்காமல் காவல் துறை அமைதி காத்தது. அதுதொடர்பாக வீடியோ ஆதாரமும் இருக்கிறது என வாதிடப்பட்டது.



அதனைத் தொடர்ந்து, ஊர்வலமாக தலைமை அலுவலகம் சென்ற பன்னீர்செல்வத்தை தடுக்க முயற்சித்தும், அவர்கள் கேட்கவில்லை. இது காவல் துறையினருக்கும் - அதிமுகவினருக்கும் இடையிலான தகராறு அல்ல. கட்சியின் இரு பிரிவினருக்கும் இடையிலான பிரச்னை. 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


மேலும் படிக்க | ஓபிஎஸ்-க்கு மேலும் அடி! பறிபோகிறது மற்றொரு முக்கிய பொறுப்பு!


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கடந்த 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் முன் நடந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ