அதிமுகவுக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் முற்றியதை அடுத்து பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் அமர்வு, பொதுக்குழுவை கூட்டலாம். ஒருங்கிணைப்பாளரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது எனவும், வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தனர்.



இதனையடுத்து அதிமுகவின் பொதுக்குழு கடந்த 23ஆம் தேதி வானகரத்தில் நடந்தது. பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பலமாக வெடித்தது. நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு துணை இருந்தாலும் பொதுக்குழுவில் பெரும்பாலானோர் ஒற்றைத் தலைமை என்ற வார்த்தையையே உபயோகப்படுத்தினர்.


அதுமட்டுமின்றி 23 தீர்மானங்களை இந்த பொதுக்குழு நிராகரிக்கிறத்  என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும், ஜூலை 11ஆம் தேதி கூடும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் மற்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று கே.பி. முனுசாமியும் கூறினர்.


இதனை எதிர்பார்க்காத ஓபிஎஸ்ஸும், அவரது ஆதரவாளர்களும் இது சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழு என கூறி கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினர்.



இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக கூறி அதிமுக பொதுக்குழு, செயற்குழு, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


மேலும் படிக்க | அதிமுகவை நிர்வகிக்கும் திறமை ஓ.பி.எஸ்ஸுக்கு இல்லை - எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா அதிரடி


அதில், கட்சி பொதுக்குழு கூட்டத்தில், உயர் நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை நிராகரித்தது, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றியது,


ஒற்றைத் தலைமை வேண்டும் என கையெழுத்திட்டு ஒப்படைத்தது, ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு கூட்டம் கூடும் என அறிவித்தது ஆகியவை நீதிமன்ற அவமதிப்பு செயல் என கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR