வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் தான் - அமைச்சர் ரகுபதி!
வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான், இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதனை பார்க்கலாம் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை தடுத்து விஜயபாஸ்கர் அவரது கல்லூரிக்கும் அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறாரர். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான், இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதனை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள் அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது. ஆனால் இதை அனுமதிக்க முடியாது விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார்.
மேலும் படிக்க | மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை - ஜெயக்குமார் பேச்சு!
புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் முன்பு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர், சர்பத், குளிர்பானங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதேபோன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதன் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தலையும் அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம் அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப்பொருள்கள் வருகிறது, பின் பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது, குஜராத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள், இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம், விஜயபாஸ்கர் காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை தடுத்து அவரது கல்லூரிக்கும் அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறாரர். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான்.
இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதனை பார்க்கலாம், அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள் அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது. ஆனால் இதை அனுமதிக்க முடியாது விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வட மாநிலங்களுக்கு பிரச்சாரம் செல்வது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ