சென்னை உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டு முன்பு ஆயிரத்திற்கு மேற்பட்ட அதிமுக -வினர் குவிந்துள்ளனர். தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கையும் விடுத்த வண்ணம் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், மதுரை, ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர். இடைத்தேர்தலில் தீபா போட்டியிட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


தீபாதான் அதிமுக தலைமையை ஏற்க வேண்டும்; சசிகலா தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.


இந்நிலையில் தீபா கூறியதாவது:


தமது அரசியல் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொண்டர்களிடம் தெரிவித்தார். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்தார். மேலும் தமது வீட்டு முன் குடியிருந்த அதிமுக தொண்டர்கள் முன் இரட்டை விரலைக் காட்டி தீபா தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.