சென்னை: பலரை அதிர்ச்சியூட்டிய சம்பவம்.. தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள பிரபலமான இருட்டுகடை (Iruttu Kadai) அல்வா கடையின் உரிமையாளர் ஹரி சிங் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 80 வயது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் ஹரி சிங்-க்கு கொரோனா வைரஸ் (Coronavirus) சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் (Corona Positive) இருந்தது. அதாவது அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, பாலயம்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சோதனை நடத்தப்பட்டபோது, ஹரி சிங் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.


READ | Topless இல் குழந்தைகள் ஓவியம் வரைவது போல் வீடியோ வெளியிட்ட Rehana Fathima


இருட்டுகடை உரிமையாளர் ஹரி சிங்கை கோவிட் -19 (COVID-19) சிறப்பு வசதிக்கு மாற்றலாமா என்பது குறித்து மருத்துவர்கள் விவாதிக்கப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனை அறையில் இறந்து கிடந்தார்.


"கோவிட் -19 அறிகுறிகள் (Infected with Coronavirus) குறித்து அவருக்கு தெரிந்தால், அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நகர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. புகழ்பெற்ற அல்வா கடையின் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


READ | 'நான் தற்கொலை செய்து கொண்டால் அதிர்ச்சி ஆக வேண்டாம்' பகீர் கிழப்பிய மாணவர்..!


சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட, இருட்டுகடை மிகவும் பிரபலமான கடை. இந்த கடை இது மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை என வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே சுவையான அல்வா விற்பனைக்கு திறக்கப்படுகிறது. இந்த கடை அருள்மிகு நெல்லையப்பர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.