தமிழகத்தில் இன்றுடன் முடிவடையும் அக்னி நட்சத்திரம்!!
தமிழகத்தில் மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது!!
தமிழகத்தில் மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது!!
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இம்மாதம் 4-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் துவங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் இன்று 28-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவித்திருந்தனர்.
இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்னே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வதைத்து வந்தது. மேலும் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியையும் வெப்பம் தாண்டியது.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் இம்மாதம் 4-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. தொடர்ந்து 24 நாட்களும் சூரியனின் கதிர்கள் நேரடியாக பூமி மீது விழுவதால் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்களும் ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களும் தெரிவிக்கின்றனர். அதுபோன்றே மக்கள் வெயில் தாக்கத்தால் பெரும் அவதியடைந்து வந்தனர்.
வெயிலுக்கு பயந்து மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து, வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் கோடை மழை பெய்து வந்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்தது. அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தபின், அதிக பட்ச வெயில் இருக்காது. பருவமழை துவங்கும் போது வெப்பத்தின் தாக்கம் மேலும் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.