AIADMK BJP Alliance Breaks: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இன்று (செப். 25) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி முடிவுக்கு வருவதாக முடிவெடுக்கப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'பாஜகவின் மாநிலத் தலைமை...' 


அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாவது,"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜகவின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அதிமுகவின் மீதும், எங்களுடைய கட்சி தெய்வங்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.


கொந்தளிப்பான சூழல்நிலை


மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஆக. 20ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, அதிமுகவின் மாநாட்டை சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், கட்சியின் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | 23ஆம் புலிகேசி போல் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது - பாஜக அண்ணாமலை விமர்சனம்!



தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகல்


இந்நிலையில், அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது" என அறிவித்துள்ளது.


என்றும்... இன்றும் இல்லை... 


கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறுகையில்,"பாஜக உடன் கூட்டணி இல்லை. இன்றைக்கும், என்றைக்கும் கூட்டணி இல்லை. சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அதிமுக பாஜக இடையிலான கூட்டணியை முறிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும்" என்றார்.  


மேலும் படிக்க | அதிமுகவே வெளியேறு-பாஜக போஸ்டரால் பரபரப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ