திமுக பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு என மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார். அவரை அ.தி.மு.க வினர் முழக்கம் எழுப்பி வரவேற்றனர். காவல்நிலையத்தில் கையெழுத்திட்டபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவினர் மீது திமுக அரசு தொடர்ந்து பொய் வழக்குகளை போட்டு வருவதாக குற்றம்சாட்டினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தங்களுக்கு வாக்களிக்கவில்லை என பெண்ணை தாக்கிய அதிமுக நிர்வாகி!


"பொய் வழக்கு போட்டு அ.தி.மு.கவை அழித்துவிடலாம் என்று நினைத்தால் பூனை பகல் கனவு கண்டதுபோல் தான். ஒரு போதும் அது பலிக்காது. அ.தி.மு.கவை அழிக்க நினைப்பது சாத்தியமில்லாதது. அ.தி.மு.கவிற்கு ஒற்றை தலைமை இல்லாததால் பொய் வழக்குகள் போடப்படுவதாக கூறும் கருத்து தவறான கருத்து. 1996-ல் அ.தி.மு.கவிற்கு அசைக்க முடியாத தலைமை இருந்தது. அப்பொழுதும் தி.மு.க அரசு பொய் வழக்கு போட்டது. 
அ.தி.மு.கவை தற்போது ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இருவரும் சிறப்பாக வழிநடத்துகிறார்கள். 



இப்போதும் பொய் வழக்கு போடுகிறார்கள். அ.தி.மு.க தலைமைக்கும் பொய் வழக்கு போடுவதற்கும் சம்மந்தமில்லை. கட்சிக்கு வெற்றி, தோல்வி என்பது இருபக்க நாணயம் போன்றது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். ஆனால் 2024 பாராளுமன்ற தேர்தலிலும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க சிறப்பான வெற்றியை பெறும்" எனக் கூறினார். கட்சிக் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் எனக் கூறிய ஜெயக்குமார், அடுத்தடுத்த கேள்விகளுக்கு திங்கள், புதன், வெள்ளி என ரிப்பீட்டாக வர உள்ளதால் மீண்டும் பதிலளிக்கிறேன் என தெரிவித்தார்.


மேலும் படிக்க | எடப்பாடிக்கு எதிராக போஸ்டர் - அதிமுக-வில் மீண்டும் உட்கட்சி பூசல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR