சென்னை: சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெருந்துறை (Perundurai) தொகுதியில் 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சர் ஆனார் வெங்கடாசலம். பின்பு, 2016-ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் வெங்கடாசலம் (N. D. Venkatachalam). மேலும் இரண்டாவது முறையாகவும் பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்றார். அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு  வழங்கப்படவில்லை.


அதன் பிறகு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் (Jayalalithaa) மறைவிற்கு பிறகு வெங்கடாசலம், அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.  2021 தேர்தலில் தனது சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கட்சி தலைமை ஜெயக்குமாருக்கு சீட் வழங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடாசலம் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதேநேரத்தில் சுயேட்சையாக போட்டியிட பெருந்துறை தொகுதியில் தோல்வியை தழுவினார். 


ALSO READ | Sasikala பரபரப்பு பேச்சு: ஊரடங்குக்குப் பிறகு சுற்றுப்பயணம், எதிர்ப்புகளுக்கு அஞ்ச மாட்டேன்


தற்போது ஆட்சி மாறியதால், மாற்று கட்சியில் இருந்து வருபவர்களுக்கு திமுகவில் நல்ல மரியாதை அளித்து வரும் நிலையில், திமுகவில் இணையலாம் என்று அவர் திட்டமிட்டு தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தார். இந்தநிலையில், நாளை காலை 10.30 மணியளவில் தனது தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் (M K Stalin) முன்னிலையில் திமுகவில் இணைகிறார். 


முன்னதாக நேற்று மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத்தலைவர் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தார். மகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் ஆர் எஸ் பாரதி, துரைமுருகன், டிஆர் பாலு, கே.என். நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


ALSO READ | முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மநீம நிர்வாகி மகேந்திரன் திமுகவில் இணைந்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR