சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத்தலைவர் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தார்.
இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின் (TN CM M K Stalin) , தமிழக சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாது வருத்தம். தேர்தலுக்கு முன்பே மகேந்திரன் வந்திருந்தால், கோவையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியும் என அவர் கூறினார். மேலும் அவர் பேசுகையில் திராவிட பாரம்பரியத்தில் வளர்ந்து வந்த மகேந்திரன் திமுகவில் இணைந்து பாராட்டக்கூடியது மகிழ்ச்சி அளிக்கக் கூடியது எனவும் கூறினார்.
மகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் ஆர் எஸ் பாரதி, துரைமுருகன், டிஆர் பாலு, கே என் நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தாலும், மற்ற பகுதிகள் போல கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெற முடியவில்லை. பல ஆண்டுகளாக எப்படியாவது கொங்கு மண்டலத்தில் திமுக-வை பலப்படுத்த வேண்டும் என திமுக முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட கொங்கு மண்டலத்தில் திமுகவை பலப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த சமயத்தில் தான் மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரனுக்கும், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த மே மாதம் மகேந்திரன் கட்சியை விட்டு வெளியே வந்தார்.
ALSO READ | MNM Mahendran-ஐ விடாமல் தொடர்கிறதா திமுக? காரணம் இதுதானா?
கடந்த சில நாட்களாகவே நடந்த பேச்சுவாரத்தை, ஆலோசனைகளுக்கு பிறகு, இறுதியாக இன்று மகேந்திரன் திமுகவில் இணைந்தார். இவரின் வருகை கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு பலத்தை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
முன்னாள் துணைத் தலைவர் ஆர் மகேந்திரன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 78 பேர் திமுகவில் இணைந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR