Tamilnadu Latest Political News: சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அழகு முத்துகோனின் திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது திருவுருவச் சிலை மற்றும் கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா மற்றும் ஜெயகுமார் மற்றும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகேன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


'OPS-க்கு விஸ்வாசம் கிடையாது'


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது,"மாவீரர் அழகு முத்துக்கோன் வெள்ளையனுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.வெள்ளையனுக்கு அடிப்படையாமல் வாழ்ந்த முதல் வீரர் அழகு முத்துக்கோன் அவர்கள் தான். அழகு முத்துக்கோனை சிறை பிடித்து துன்புறுத்தி கட்டாயப்படுத்தி, தன்னுடன் இருக்கும் நபர்களை காட்டிகொடுக்க வேண்டும் என கூறியும் தன் தலையை போனாலும் சரி காட்டிக் கொடுக்கக்காமல் அந்த துரோகத்தை நான் செய்ய மாட்டேன் என கூறினார், அவர் அந்த அளவுக்கு உறுதியோடு இருந்தார். வீரனாகப் பிறந்து வீரனாகவே வாழ்ந்தார்.


மேலும் படிக்க | சிசிடிவியில் உள்ளவர்கள் தான் சரண்டரானவர்களா? இயக்குனர் அமீர் சரமாரி கேள்வி!


கட்சியில் ஒன்று சேர்வது உண்மைத் தன்மை இல்லை. கட்சித் தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ஓ. பன்னீர்செல்வம் துரோகத்தை செய்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஓபிஎஸ் அறிமுகப்படுத்தட்டவர் கிடையாது. டிடிவி தினகரன் இல்லையென்றால் ஓபிஎஸ் கிடையாது. பொறுப்பு கொடுத்த கட்சி அலுவலகத்தையே சென்று இடித்து உடைத்திருக்கிறார். நாங்கள் எல்லாம் அதனை கோவிலாக நினைக்கிறோம். கட்சிக்கு எந்த ஒரு விசுவாசமும் அவரிடம் கிடையாது" என்றார்.


ரத்தத்தை குடித்த அட்டைகள்


சசிகலா குறித்த கேள்விக்கு,"கட்சியில் இல்லாத ஒருவர் எப்படி கட்சி இணைக்க முடியும் அது முழு சோற்றில் பூசணிக்காயை மறைப்பதற்கு சமம்" என்றார். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி போன்ற அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.


மேலும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "தமிழகத்தில் ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள் நடைபெற்று வருகிறது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்படுகிறார். முழுமையான விவரம் வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை தேவை. தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றினால் பிரச்னை சரியாகாது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மாற்றினால் தான் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும்.


'அண்ணாமவை என்கின்ற வேதாளம்...'


விக்கிரவாண்டி தேர்தல் நடைபெறும் இடத்திலேயே, கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு இருக்கிறதா என ஒரு சந்தேகம் எழுகிறது. மக்களை பாதுகாக்க கூடிய கட்டமைப்பில் அரசு தோல்வி அடைந்துள்ளது" என குற்றஞ்சாட்டி உள்ளார்.


அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு செல்வப் பெருந்தகை மீது ஏறி இருக்கிறது. 
லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிக்கிறேன் என அண்ணாமலை கூறியிருக்கிறார். லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிப்பது ஒன்னும் அவ்வளவு அவமரியாதை செயல் அல்ல, இன்றும் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் லுங்கி அணிகிறார்கள், இஸ்லாமியர்களும் லுங்கி அணிகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் இன்று லுங்கி அணிகிறார்கள். எனவே அது அவ மரியாதைக்குறிய செயல் அல்ல, நான் பெரும்பாலும் வேட்டி அணிந்து தான் தான் பேட்டி கொடுப்பேன்" என தெரிவித்தார்.


ஓபிஎஸ் பதிலடி...!


ஜெயக்குமாரின் இந்த கருத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செலவம் பதில் அளித்துள்ளார். அதில்,"இரட்டை இலை சின்னம் நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. தொண்டர்களின் எழுச்சிக்காக தான் இதனை எம்ஜிஆர் உருவாக்கினார். பத்து தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என நாட்டு மக்களுக்கு தெரியும், இந்த நிலை தொடரக்கூடாது என்று தான் பிரிந்திருக்க கூடிய அதிமுக இணைய வேண்டும் என்பதற்காக அதிமுக தொண்டர்கள் கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


அதிமுக வாக்கு யார் பக்கம்?


முதல் தோல்வியே நான் கூறினேன் தோல்வி ஏற்பட்ட இடத்தில் சென்று நேரடியாக குறைகளை அறிந்து செயல்படுவோம் என்று யாரும் கேட்கவில்லை, விக்கிரவாண்டியில் 83 சதவீதத்தின் மேல் வாக்குப்பதிவாகியுள்ளது என்றால், அதிமுக வாக்குகளும் பதிவாகியுள்ளது என்றுதான் அர்த்தம், அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியவரும். பொதுமக்களின் கருத்தை நல்ல அபிப்பிராயத்தை நாம் இழந்திருக்கிறோம். ஜெயக்குமாருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவர் வாயில் இருந்து நல்ல வார்த்தைகள் வராது" என தெரிவித்தார். ஓ. பன்னீர்செல்வமும் எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அழகு முத்துக்கோனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


மேலும் படிக்க | ஓட்டுகளை பெற்ற பின்னர் அடிப்படை வசதி செய்யப்பட்டதா?
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ