விக்கிரவாண்டியில் இந்த கட்சி தான் ஜெயிக்கும் - மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி!

Vikravandi By Election: பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Jul 10, 2024, 03:00 PM IST
  • இன்று நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.
  • விக்கிரவாண்டியில் திமுகதான் ஜெயிக்கப் போகிறது.
  • மதுரை ஆதீனம் சாத்தான்குளம் அருகே பரபரப்பு பேட்டி.
விக்கிரவாண்டியில் இந்த கட்சி தான் ஜெயிக்கும் - மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி! title=

தமிழ்நாட்டில் மாணவர்கள் பாஸ்மார்க்கை நோக்கி செல்லவில்லை, டாஸ்மாக்கை நோக்கி தான் செல்கிறார்கள். தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடையும் அடக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தவிலை கிராமத்தில் அருள் தரும் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் தலைமை வகித்து விழாவினை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் கூறுகையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இன்றுடன் 66 பேர் உயிரிழந்தனர். இது ஒரு வருந்தத்தக்க விஷயம். மாணவர்கள் பாஸ்மார்க்கை நோக்கி பயணிக்கிறார்களோ இல்லையோ டாஸ்மாக்கை நோக்கி பயணிக்கின்றனர். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.

மேலும் படிக்க - லேட் மேரேஜ் செய்யும் இளைஞர்களே கவனம்... பல ஆண்களுக்கு டுமிக்கி கொடுத்த பெண் - இன்னும் சிக்கல

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று கனக சபை நிகழ்வில் அனைத்து மக்களும் தரிசனம் செய்ய அனுமதி அளித்தது அனைவரும் மகிழ்ச்சி, தமிழ்நாட்டில் ஜே இ இ தேர்வில் பழங்குடியின மாணவி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒரு கொடுமையாக செயல், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும். இவை அனைத்தும் நடந்தும் மக்கள் திமுகவுக்கு தான் ஓட்டு போடப் போகிறார்கள் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தான் ஜெயிக்கப் போகிறது என மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக சுவாமி மதுரை ஆதீனம் சாத்தான்குளம் அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்த்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியின் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக திமுகவை சேர்ந்த நா.புகழேந்தி இருந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென மரணம் அடைந்தார். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தர் அறிவிக்கப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத விதமாக அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று அறிவித்தது. இதனால் பாமக, திமுக, நாம் தமிழர் இடையே போட்டி நிலவியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வாக்கு சேகரிப்பு முடிவடைந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மொத்தம் 276 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்கு சாவடிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குப்பதிவு ஜோராக நடைபெற்று வருகிறது. ஒருசில இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற தாமதம் ஏற்பட்டது. பிறகு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 9 மணி நிலவரப்படி மொத்தம் 20 சதவீதம் வாக்குகள் பதிவானது.

மேலும் படிக்க | கிசுகிசு : சினிமா வாரிசு பக்கம் இணைய ரெடியாகும் பெரிய தலைகள்..! அவரும் வர்றாமே?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News