Tamil Nadu Political News: தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு மதுரையில் பொன்னாடை அணிவித்து கௌரவித்தா அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "ஓ. பன்னீர்செல்வத்திற்கு மூளை குழம்பியுள்ளது எனவும், அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதன் முழுவிவரத்தையும் பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.பி. உதயகுமார் என்ன பேசினார்?


கேள்வி: இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, 


ஓ. பன்னீர்செல்வத்திற்கு மூளை குழம்பியுள்ளது


"ஓ. பன்னீர்செல்வம் மனக்குழப்பத்தில் உள்ளார். அவருக்கு மூளை குழம்பியுள்ளது. அவர் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். நேற்று வரை பெரிய பொறுப்பில் இருந்தவர் பாவம். திடீரென பொதுக்குழு எடுத்த ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அதிர்ச்சிக்கு உள்ளாகி, நிராயுதபாணியாக உள்ளார்" என்றார்.


மேலும் படிக்க - இரட்டை இலை சின்னம் மீண்டும் முடங்கும் என ஓபிஎஸ் அணி பகிரங்க எச்சரிக்கை


கேள்வி: தேர்தல் கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக அமித்ஷா தெரிவித்தது குறித்த கேள்விக்கு,


பாஜக உடன் கூட்டணி இல்லை


அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. பாஜகவுடன் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என அறிவிக்கப்பட்டு விட்டது.


அதிமுகவின் மதிப்பீடு அண்ணாமலைக்கு தெரியவில்லை


அண்ணாவை, அம்மாவை பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும் தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் இருக்க முடியாது. அதிமுக இயக்கத்தின் மதிப்பீடு அவருக்கு தெரியவில்லை. 


மேலும் படிக்க - கொத்து கொத்தாக பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்


லேகியம் விற்பவர் மாதிரி பேசும் அண்ணாமலை


கவுன்சிலர் பதவியில் கூட ஜெயிக்காதவர். அரசியல் அனுபவம் அவருக்கில்லை. தேர்தலில் நின்று வென்றால் தான் பக்குவம் வரும். லேகியம் விற்பவர் மாதிரி பேசி கொண்டிருக்கிறார். 


அதிமுகவை அண்ணாமலை அப்பனே வந்தாலும் அழிக்க முடியாது


அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது. இது 2 கோடி தொண்டர்களின் எச்சரிக்கை. ஆண்டவனே வந்தாலும் அதிமுகவை தொட்டுப்பார்க்க முடியாது. 


வேஷ்டியை கழட்டி விட்டு அண்ணாமலை ஓட வேண்டும்


பொறுமைக்கு ஒரு அளவு இருக்கிறது தம்பி. நாங்கள் பேச ஆரம்பித்தால் வேஷ்டியை கழட்டி விட்டு நீ ஓடி விட வேண்டும், கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். அண்ணாமலையிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.


மேலும் படிக்க - 'ஆட்டு குட்டிகளை விட்டு ஆழம் பார்க்க கூடாது' - பாஜக குறித்து ஜெயக்குமார் அதிரடி


அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம் என்ன?


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் (Lok Sabha Election 2019) இருந்து பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக உட்பட கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளிலும் போட்டயிட்டது. ஆனால் ஒரே ஒரு தொகுதியில் (தேனி) மட்டும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் தோல்வியை தழுவியது. 


அதனைத்தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகித்தது. அதில் அதிமுக 66 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பிறகு, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். 


மேலும் படிக்க - பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன எடப்பாடி, டெல்லி பறந்த ஜி.கே.வாசன்..!


அதன்பிறகு தான் அதிமுக, பாஜக இடையே கருத்து மோதல் உருவானது. தனக்கென ஒரு தனி ரூட் போட்டுக்கொண்டு, தமிழகத்தில் பாஜக என்ற கட்சியை தமிழகத்தில் வளர்க்க போகின்றேன் என்ற நோக்கத்தில், கூட்டணி கட்சி உட்பட அனைத்து கட்சிகளையும் கடுமையாக விமர்ச்சிக்க தொடங்கினார். குறிப்பாக கூட்டணியில் உள்ள அதிமுக கட்சியின் ஊழல்களை குறித்து பேசிய அண்ணாமலை, முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் அண்ணா குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.


அதிமுக என்ற கட்சியையும், அதன் தலைவர்களை தொடர்ந்து அண்ணாமலை அவமதித்து வருகிறார். கூட்டணி தர்மத்தை மீறி நடந்துக் கொள்கிறார். இனி பொறுத்துக்கொள்ள முடியாது என அதிமுகவினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். 


இந்த உச்சக்கட்ட மோதலை அடுத்து, தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும். இல்லை என்றால் கூட்டணி கிடையாது என்று அதிமுக தரப்பில் தெளிவாகக் கூறப்பட்டது. ஆனால் பாஜக மேலிடம் அண்ணாமலையை மாற்றப் போவதில்லை என உறுதியாக சொல்லிவிட்டது.


இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அதிமுக - பாஜக கூட்டணி (AIADMK-BJP Alliance) முடிவுக்கு வந்தது


மேலும் படிக்க - அண்ணாமலைக்கு அருகதை இல்லை: கேபி முனுசாமி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ