அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் தன் பெயர் தொடர்புபடுத்தப்பட்டு, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சூழ்ச்சிகள் பின்னப்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார். ஆனால், இந்த விவகாரத்தில் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால், எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் அண்மையில் பேட்டி கொடுக்கும்போது, கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் இளங்கோவனிடம் கொடுக்கப்பட்டதாக கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கனகராஜின் அண்ணன் தனபால் கலந்த சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.


மேலும் படிக்க | கலாக்‌ஷேத்ரா விவகாரம்: மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் பணியிடை நீக்கம்!


அந்த மனுவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடநாடு கொலை மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கனகராஜன் அண்ணன் தனபால் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவர் ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டவர் என நீதிமன்றமும் பதிவு செய்துள்ளது. அதேபோல அரசு மருத்துவர்களும் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அவர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவது ஏற்றுக்கொள்ள முடியாது கண்டிக்கத்தக்கது.


எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்போது புகார் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவரும் தனபாலை திமுகவும், ஓபிஎஸ் அணியும் பின்புறம் இருந்து இயக்குவதாகவும், ஏற்கனவே அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் தான் என அவரது மனைவி தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளதாகவும் தெரிவித்தார். கொடநாடு கொலை  கொள்ளை சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் இது குறித்து தான் மேலும் பேச முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊர் சென்றடைந்தது: பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ