சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இதனையடுத்து, தேர்தல் நடத்தப்படாமல் உள்ள மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் (Supreme Court of India) உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கான தீவிர ஏற்பாடுகளில் அதிமுக, திமுக (DMK), பாஜக (BJP) மற்றும் மற்ற இதர கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. 


இந்நிலையில், அதிமுக (AIADMK) ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் (OPS), இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் (EPS)தலைமையில், வரும் புதன் மற்றும் வியாழக் கிழமை ஆகிய தினங்களில் 9 மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 


ALSO READ | வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் - அதன் முக்கிய அம்சங்கள்!


ஏற்கனவே, தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற அதிமுக தற்போது உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியுள்ளது.


அதேபோல தமிழகத்தில் வரவிருக்கும் 13 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில் பல கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தது. கடந்த 10 வருட அ.தி.மு.க ஆட்சியின் நிதிநிலைமை குறித்து முழு விவரங்கள் வெளியிடப்பட்டது. அதில் ஒன்று உள்ளாட்சித் தேர்தலை சரியான நேரத்தில் நடத்தாததால் தமிழக அரசுக்கு ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என்பதாகும்.


ALSO READ | Tamil Nadu: பாஜக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?


விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலை எதிர்கொள்ள, அதற்கான வியூகம் பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR