சென்னை மாதவரம் அடுத்த மாத்தூரில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் நிறுவனம் இயங்கி வருகிறது. அதை அதிமுக மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் சிவில் முருகேசன் என்பவர் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் நிறுவனத்தில் பணிபுரியும் 17 வயது சிறுமி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று, அலுவலகத்தில் உள்ளே இருந்த சிவில் முருகேசன், கணக்கு சரி பார்க்க வேண்டும் என்று உள்ளே வர சொல்லியிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்பொழுது உள்ளே சென்ற சிறுமி, கணக்கு வழக்குகளை ஒப்படைத்துக் கொண்டிருந்தபோது சிவில் முருகேசன் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அங்கிருந்த தப்பிக்க முற்பட்ட சிறுமியின் கையை பிடித்து இழுத்து தகாத செயல்களில் ஈடுபட்டதுடன், சம்பவம் குறித்து வெளியே சொன்னால் ‘உன்னையும் உனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன்’என முருகேசன் மிரட்டியதாக தெரிகிறது. இதனையடுத்து பணி முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுமி இது குறித்து தனது தாயாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். 



மேலும் படிக்க | 8 வயது சிறுமியை கடத்தி முத்தம் கொடுத்த வாலிபருக்கு 17 ஆண்டு சிறை


சம்பவம் குறித்து பதற்றமடைந்த சிறுமியின் பெற்றோர் சென்னை எண்ணூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரிக்க சென்ற போது சிவில் முருகேசன் தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்து சிவில் முருகேசன் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். தனது நிறுவனத்தில் வேலை பார்த்த சிறுமியிடம் முதலாளியே அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | புளிய மரங்களை வெட்டி பேருந்து நிலையம் வேண்டாம் - உயர் நீதிமன்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR