பிரதமர் பெயரை மாற்றி கூறிய அதிமுக அமைச்சர்!!
சமீப காலமாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொது மேடைகளில் பேச்சுகளில் தடுமாற்றம் காணப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவின் பிரதமர் பெயரை அவர் மாற்றி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் 46-வது ஆண்டு விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. அப்போது அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சீனிவாசன், டெங்கு காய்ச்சல் தொடர்பாக துணை முதல்வர் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசிய பிறகே எய்ம்ஸ் போன்ற மருத்துவர்கள் தமிழகத்து வரவழைகப்பட்டார்கள் என பேசினார்.
பிரதமர் மோடிக்கு பதில் மன்மோகன்சிங் என பொதுக்கூட்டத்தில் உளறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.