ஸ்ரீபெரும்புதூர் அதிமுக MLA பழனிக்கு கொரோனா; நலம் விசாரித்த தமிழக முதல்வர்…!!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனியின் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனியின் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த கே.பழனி(57) உள்ளார். இவர் அதிமுகவில் குன்றத்தூர் ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார்.
READ | தமிழகத்தில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா... மொத்த எண்ணிக்கை 42,687 ஆக உயர்வு...
கடந்த புதன்கிழமை கே.பழனி உடல்சோர்வால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் அன்றே கரோனா பரிசோதனை செய்ததாகவும், இதில் வெள்ளிக்கிழமை மாலை அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் உடனடியாக சென்னை மணப்பாக்கம் பகுதியில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிமுகவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கே.பழனியின் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். உடல்நிலையை நன்றாக கவனித்துக்கொள்ளும்படி முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
READ | Delhi: 10-49 படுக்கை திறன் கொண்ட நர்சிங் ஹோம்கள் 'கோவிட் -19 சுகாதார மையம்' என அறிவிப்பு
தமிழகத்தில் நேற்று 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,487 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 30,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.