தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது..!
தமிழகத்தில் இன்று மேலும் 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 33 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதனால், தமிலகத்தில் மொத்தம் பாதிக்கபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,487 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 30,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1989 #COVID19 cases & 30 deaths reported in Tamil Nadu today. Total number of cases in the state is now at 42687, including 18878 active cases, 23409 discharged & 397 deaths: State Health Department pic.twitter.com/0vjnw0ibD4
— ANI (@ANI) June 13, 2020
சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 136 பேருக்கும், திருவள்ளூரில் 78 பேருக்கும், திருவண்ணாமலையில் 50 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 79 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 17,911 மாதிரிகள் சோதனை செய்யபட்டுள்ளது. இன்று வரையில் தமிழகத்தில் 6,91,817 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 25 பேரும், செங்கல்பட்டு, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூரில் தலா ஒருவரும் என மொத்தம் 30 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது.
READ | COVID-19 இறப்பு ஆபத்து ஆண்களை விட பெண்களுக்கு அதிகம்: ஆய்வு
இன்று உயிரிழந்தவர்களில் 18 பேர் அரசு மருத்துவமனையிலும், 12 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் சுமார் 1,362 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 23,409 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 18,878 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 2,194 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 35,680 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 4,813 பேரும் உள்ளனர்.