அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி கூடுவதாக முதல்வர் மற்றும் துணைமுதலவர் அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்கிற மரபு உண்டு. அந்த வகையில், அரசியல் கட்சிகள் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களை கூட்டி வருகின்றன.


இந்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வரும் 20 ஆம் தேதி (திங்கட்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர். 


இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்....அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வரும் 20 ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் திரு. இ. மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறும். 


கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூடத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.