சென்னை: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார். கடந்த 20 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். அவருக்கு 80 வயதாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது அதிமுகவில் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் ஒரு மூத்த தலைவராவார். கடந்த சில ஆண்டுகளாகவே இவரது உடல்நிலையில் சில பிரச்சினைகள் இருந்து வந்தது. அவ்வப்போது சிகிச்சை எடுத்துக்கொண்டே இருந்தார். கடந்த ஜூலை மாதம் திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட அவர் சிகிச்சைக்காகச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


15 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவின் அவைத் தலைவர் பொறுப்பில் மதுசூதனன் இருந்தார்.


முன்னதாக ஜூலை 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை சந்திக்க முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (EPS) மருத்துவமனைக்குச் சென்றார். அதேநேரத்தில் முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவும் வந்தார். உடனடியாக அங்கிருத்து எடப்பாடி பழனிசாமி கிளம்பி சென்றுவிட்டார். இது பெரும் விவாதத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR